உறவுகள்புதியவை

ஓப்பன் ரிலேஷன்ஷிப் என்பது என்ன? அதில் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

இன்றைய கால கட்டத்தில் நம்முடைய கலாச்சாரங்கள் நிறைய விதத்தில் மாறி வருகிறது. திறந்த உறவு முதல் லிவ்விங் டுகதர் வரை மக்களின் மனப்போக்கு மாறி உள்ளது என்றே கூறலாம். இதில் நீங்கள் எந்த உறவில் அடியெடுத்து வைத்தாலும் அதில் விருப்பத்துடன் ஈடுபடுகிறோமா போன்ற கேள்விகளை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாம் நிறைய உறவுச் சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.

​ஓப்பன் ரிலேஷன்ஷிப்

ஒரு திறந்த உறவு என்பது ஒரு நபர் ஒருவரை விட அதிகமான துணையை கொண்டிருப்பது ஆகும். இந்த வெளிப்படை உறவில் ஈடுபடும் நபர்கள் தங்கள் துணைகளிடம் ஒரு வெளிப்படையான உறவை திறக்கிறார்கள். இருப்பினும் இதிலும் யதார்த்தமான சிக்கல்கள் நிறைய வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே ஒரு வெளிப்படையான விவகாரத்தில் ஈடுபடுவதற்கு முன்பு உங்களுக்குள்ளே இந்த கேள்வியை தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம். அப்பொழுது தான் அந்த உறவில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து நீங்கள் மீள முடியும்.

​எந்த வகையான உறவை கொண்டிருக்கிறீர்கள்

வெளிப்படையான உறவு என்பது பரந்த போக்கை கொண்டுள்ளது. ஏன் உறவில் உங்களுக்கு தெரியாத நபர்கள் கூட இருக்கலாம். ஒரு சிலர் மட்டுமே ஒரு சில முன்னறிவிப்புடன் வெளிப்புற நபர்களுடன் ஈடுபடுகிறார்கள். உதாரணமாக ஒருத்திக்கு ஒருத்தர் என்ற திருமணத்திற்கு புறம்பான உறவை கொண்டிருக்கும் போது குடும்பத்தில் இருக்கும் போது வெளியே இருக்கும் உறவை பற்றி பேசாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களை சந்திக்கின்றனர். அதே மாதிரி உங்க பாலியல் எல்லைகளையும் வகுத்துக் கொள்வது அவசியம். இதனால் உறவுச் சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

​இரு பக்கமும் வெளிப்படை உறவு இருந்தால்

உங்க துணையும் வெளிப்படை உறவில் ஈடுபட விரும்பினாலோ அதே மாதிரி நீங்களும் வெளிப்படை உறவில் ஈடுபட விரும்பினால் அது குறித்து இருவரும் பரஸ்பரமாக பேசி முடிவெடுக்க வேண்டும். ஆனால் ஒரு நபர் மட்டுமே இதை அதிகமாக விரும்பினால் கண்டிப்பாக உறவில் பிரச்சனைகள் எழ ஆரம்பித்து விடும். எனவே வெளிப்படையான உறவு பற்றிய எண்ணங்கள் இரண்டு பக்கமும் இருந்தால் தொடர்பு கொள்வது நல்லது.

​என்ன விரும்புகிறீர்கள்

ஒரு வெளிப்படையான உறவில் பலவிதமான சாத்தியக் கூறுகள் உள்ளன. இதில் ஒன்றிலிருந்து நீங்கள் எதை எதிர்ப்பார்க்கிறீர்கள் என்பதை அறிவது மட்டுமே நியாயமானது. இதை நீங்கள் தெளிவாக தெரிவிக்கும் வரை உங்களுக்கு அந்த உறவு வசதியாக இருக்காது. மற்றவர்கள் உங்க உறவைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

​உடலுறவு பற்றிய கேள்விகள்

வெளிப்படையான உறவுகள் உங்க பாலியல் வாழ்க்கையை சரிசெய்ய மட்டுமல்ல. திறந்த உறவில் பாலியல் வாழ்க்கை என்பது தற்காலிகமானது. எந்தவொரு உறவிலும் ஒரு காதல் ஜோடிக்கான சிறந்த அடித்தளம் இல்லையென்றால் இது உங்களை சிக்கலில் ஆழ்த்தும். நீங்கள் இருவரும் உங்க உறவை வெளிப்படையாக எடுத்துச் செல்ல விரும்பினால் இருமுறை சிந்தியுங்கள்.

​சமமாக இருத்தல்

மற்ற துணைகளின் தேவைகளையும், உணர்வுகளையும் எவ்வாறு கையாள்வீர்கள்

இது அவர்களின் தேவைகளும் உணர்ச்சிகளும் சம்பந்தப்பட்ட விஷயம் ஆகும். இது உங்கள் உறவை வெளிப்படையாக எடுத்துச் செல்ல விரும்புவதற்கான பரந்த கண்ணோட்டத்தை உங்களுக்கு வழங்கும். ஒரு துணையின் உணர்ச்சி மற்றும் உடல் தேவைகளை கையாள்வது சிலருக்கு கடினமாக உள்ளது. எனவே இந்த குழப்பமான சூழ்நிலையில் உறுதியாக சமமாக இருக்க முற்படுங்கள்.

​பொறாமை உங்க உறவை அழிக்குமா

நீங்கள் ஒரு வெளிப்படையான உறவில் இருப்பதால் எந்த பொறாமையும் இருக்காது என்று அர்த்தமல்ல. வேறு எந்த உறவையும் போல வெளிப்படையான உறவில் பொறாமைப்படுவது உண்மையில் சாதாரணமானது. ஒரு நபராக நீங்கள் உங்க துணை மீது எவ்வளவு பொறாமைப்படுகிறீர்கள் என்பதையும் அது உங்க உறவை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

​வெளிப்படை உறவின் அபாயத்தை தடுக்க

முதலில் உங்களுக்கு திறந்த உறவு சரி வருமா என்பதைப் பாருங்கள். இதுபோன்ற சூழ்நிலைகள் உங்க வாழ்நாள் முழுவதும் வடுக்களை ஏற்படுத்தக் கூடும். இது பின்னர் குணமடைய கடினமாக இருக்கலாம். எனவே இது போன்ற சூழ்நிலையில் வெளிப்படை உறவில் அடியெடுத்து வைப்பதற்கு முன் கவனமாக இருங்கள்.

Related Articles

Close