ஆரோக்கியம்புதியவை

பெண்கள் மார்பகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள 5 வழிமுறைகள் இதோ

பெண்களுக்கு மார்பக ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நிறைய பெண்கள் தங்கள் மார்பகத்தை கவனிக்காமல் இருப்பதே புற்றுநோய் போன்ற கட்டிகள் வரக் காரணமாக அமைகிறது. இதில் நிறைய பேருக்கு மார்பகம் தொங்கக் கூட ஆரம்பித்து விடுகிறது. எனவே பெண்கள் தங்கள் மார்பகத்தை அழகுடனும் அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். அதற்கான வழிமுறைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

​மார்பக ஆரோக்கியம்

உங்க 20 முற்பகுதியிலும் சரி 70 களின் பிற்பகுதியிலும் சரி மார்பக கட்டிகள், மார்பக வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கண்டுக்காமல் விடப் கூடாது. உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அதே மாதிரி பெண்கள் சுய மார்பக பரிசோதனையும் செய்வது அவசியம் ஆகிறது. ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் பல நூற்றாயிரக் கணக்கான பெண்கள் மார்பக பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். உங்க குடும்பத்தில் வேறு யாருக்காவது மார்பக புற்று நோய் போன்றவை இருந்தால் உங்களுக்கும் மரபணு ரீதியாக தொடரும் அபாயம் உள்ளது. எனவே பெண்கள் தங்கள் மார்பக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். எனவே பெண்கள் தங்கள் மார்பக ஆரோக்கியத்தை எப்படி பராமரிக்கலாம் என்பதற்கான 5 வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

​தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

உடற்பயிற்சி செய்ய வயது வரம்பு தேவையில்லை. எனவே பெண்கள் தங்கள் வயது வரம்பை பொருட்படுத்தாமல் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருங்கள். தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது உங்க மார்பக ஆரோக்கியத்திற்கு நல்லது. இது எந்தவொரு நாள்பட்ட நோயையும் உருவாக்கும் ஆபத்தை குறைக்கும். எனவே உங்களுக்கு பொருத்தமான உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து செய்து வரலாம்.

​நீரேற்றத்துடன் இருங்கள், ஆரோக்கியமான உணவு

ஒரு நாளில் நாம் குடிக்கும் நீரின் அளவும் மற்றும் எடுத்துக் கொள்ளும் உணவும் நம் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து முதல் எட்டு பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது நல்லது. ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், கேரட், தக்காளி போன்ற காய்கறிகளும், தர்பூசணி, பெர்ரி மற்றும் செர்ரி போன்ற பழங்களும் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும், அக்ரூட் பருப்புகள், மீன், சோயாபீன்ஸ் மற்றும் பூசணி விதைகளில் காணப்படும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை உட்கொள்வதை பெண்கள் அதிகரித்து கொள்ளலாம்.

​ஆரோக்கியமான உடல் எடையை பராமரியுங்கள்

சில ஆய்வுகளின்படி பெண்கள் அதிக எடையுடன் இருப்பது மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறுகிறது. உங்க உடல் நிறை குறியீட்டை (பிஎம்ஐ) 30க்கு கீழ் வைத்திருக்க முயற்சிக்கவும். அதற்கு மேல் இருக்கும் பிஎம்ஐ அளவுகள் மார்பக புற்று நோய் அல்லது நாள்பட்ட சுகாதார பிரச்சனைகளை உருவாக்குகிறது.

​புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தை கை விடுங்கள்

ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது நம்மளுக்கு நீண்ட ஆயுளை தரக் கூடியது. அதற்காக நீங்கள் புகைப்பிடிப்பதையும், குடிப்பதையும் விட்டு விட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கிளாஸ் மதுபானங்களை அருந்துவது பெண்களுக்கு மார்பக புற்று நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. அதே மாதிரி பெண்கள் புகைப்பிடிப்பதும் மார்பக புற்று நோய் அபாயத்தை ஏற்படுத்தும். எனவே பெண்கள் தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை விட்டு விட்டு சரியான நேரத்தில் தூங்குதல் மன அழுத்தத்தை குறைத்தல் போன்ற நிம்மதியான வாழ்க்கை முறையில் ஈடுபடலாம்.

​செய்ய வேண்டிய சில விஷயங்கள்

பெண்கள் தங்கள் மார்பக ஆரோக்கியத்தை கவனிப்பது அவர்களின் முக்கியமான பொறுப்பாகும். எனவே மார்பகத்தில் வலியோ கட்டிகளோ காணப்பட்டால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Related Articles

Close