உறவுகள்புதியவை

உங்கள் துணையின் கடந்தகால வாழ்க்கையை ஏற்க கஷ்டமா இருக்கா? அப்போ இத பண்ணுங்க

ஒரு ஜோடி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு பிறகு ஒரு அழகான திருமண பந்தத்தில் நுழைகின்றனர். திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவிக்கு நேர்ந்த கசப்பான பாலியல் வன்முறை அவருக்கு தெரிய வருகிறது. அந்தப் பெண் தனது கல்லூரி நாட்களில் தன் வகுப்பு தோழனுடன் உறவு வைத்திருந்தார் என்பதும் தெரிய வருகிறது. அந்த பையன் அந்தப் பெண்ணை மிரட்டி ப்ளாக்மெயில் செய்து வந்ததும், அது ஒரு பயமுறுத்தும் நச்சு உறவாக இருந்து வந்ததும் தெரிய வந்தது. அவன் அடிக்கடி தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டி வந்துள்ளான். அவன் அவளை உடல் ரீதியாக கட்டாயப்படுத்தி வந்துள்ளான். இப்படி தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்கள் குறித்து கணவரிடம் பகிர்ந்து கொள்கிறார் ஸ்வேதா.

இதற்காக அவள் தன் கணவனிடம் மன்னிப்பும் கேட்டு தன் மனதில் புதைந்து கிடந்த பாரத்தை இறக்கி வைத்ததாக நினைத்து அழுகிறார். ஆனால் இது நிம்மதியான ஒன்றாக இனி இருக்கப் போவதில்லை. ஏனெனில் இப்பொழுது மனைவியின் மனம் லேசாகி கணவனின் மனம் கணக்கிறது. மனைவியின் பழைய வாழ்க்கையை கணவரால் லேசாக எடுத்துக் கொள்ள முடியுமா? அவளை மன்னிக்க முடியுமா? கணவரின் மனம் இளகுமா?

ஆனால் இது கணவருக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. அவளுடைய கடந்த காலத்தை கேட்ட பிறகு நான் மிகவும் கலக்கமடைந்து உள்ளேன். அவளுடைய புன்னகையை பார்க்கும் போது அவள் முழுவதையும் சொல்லி விட்டால இல்லை என்னிடம் எதையாவது மறக்கிறாளா என்ற சந்தேகம் தோன்றுகிறது. அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று முழுமையாக அறியும் வரை என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை, அவளை மனசார ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை என்கிறார் அந்த கணவர்.

நிறைய தம்பதிகளுக்கு திருமணத்திற்கு பிறகு தான் இது போன்ற பிரச்சினைகள் தெரிய வருகிறது. ஒரு துணையின் கடந்தகால பாலியல் வாழ்க்கையை ஏற்றுக் கொள்வது என்பது அனைவருக்கும் அவ்வளவு எளிதானது அல்ல. அவர்கள் அதை முன்பே அறிந்திருக்கவில்லை என்றால் சிலர் தன்னை ஏமாற்றியதாக உணரலாம். இருப்பினும், உண்மையான கேள்வி என்னவென்றால், ஒரு துணையின் கடந்தகால பாலியல் வாழ்க்கையை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? என்பது குறித்து உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

உளவியல் நிபுணர்களின் கருத்து

உளவியல் நிபுணர்களின் கூற்றுப்படி அத்தகைய சூழ்நிலையை கேட்டவுடன் சங்கடமாக இருப்பது இயல்பு. இருப்பினும் ஒரு துணை தன்னுடைய கடந்த கால பாலியல் வாழ்க்கையை பற்றிக் கூறும் போது தன்னுடைய துணையின் நம்பிக்கையை இழக்கிறார். ஆனால் ஒரு துணையாக நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் இனி உங்கள் திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமைய அவரின் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அவரை வீணாக சந்தேகப்படாமல் எரிந்து விழாமல் அவருக்கு ஆதரவாக இருக்கப் பழக வேண்டும்.

இது உங்கள் இருவருடைய எதிர்காலத்திற்கு நல்லது. உங்கள் துணையின் கடந்த கால பாலியல் வாழ்க்கையில் இன்னும் சந்தேகம் இருந்தால் அது குறித்து உங்கள் துணையிடம் அமைதியாக பேசி தெளிவு பெறலாம். இதை ஒரு கண்ணியமான உரையாடலாக நடத்த வேண்டும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள். இதுவே கடந்த காலத்தை பற்றிய கடைசி உரையாடலாக இருக்க வேண்டும். திரும்பத் திரும்ப அது குறித்து கேள்வி கேட்டு துளைத்துக் கொண்டு இருப்பது உங்கள் திருமண உறவை சீர்குலைத்து விடும். இதன் பின்னர் இந்த தலைப்பை பற்றி பேசுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

கடந்த காலத்தை பற்றி அறிந்து கொள்வது முக்கியம் தான். ஆனால் அது உங்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதிக்க கூடாது , இல்லையா? என்பதை உணர்ந்து செயல்படுங்கள் தம்பதிகளே!
உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. வெறும் உடல் ரீதியான பந்தமாக உங்கள் துணையை நினைக்காமல் அன்பால் ஆறுதல் சொல்லுங்கள். எல்லாவற்றையும் மறந்து விட்டு புதியதொரு காதல் வாழ்க்கைக்கு அடியெடுத்து வையுங்கள். சந்தோஷம் பொங்கட்டும்.

Related Articles

Close