அழகு..அழகு..புதியவை

அக்குளில் முடி வளர்வதையும், கருமையையும் தடுக்க இதை தடவினால் போதும்!

நம் அழகைக் கெடுக்கும் வகையில் கை, கால், முகம், அக்குள் போன்ற பகுதிகளில் தேவையற்ற முடிகள் வளரும்.

அதோடு அப்பகுதியில் அரிப்பை உண்டாக்கி, கருமையாக காணப்படும், இதை போக்க இயற்கையில் உள்ள சில டிப்ஸ் இதோ,

தேவையான பொருட்கள்:

  • மஞ்சள் தூள்
  • ரோஸ் வாட்டர்
  • குளிர்ந்த பால்
  • வெதுவெதுப்பான நீர்

செய்யும் முறை:

ஒரு பௌலில் மஞ்சள் தூள் மற்றும் பால் அல்லது ரோஸ் வாட்டர் ஆகிய அனைத்தையும் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதை அக்குளில் தடவி 20-30 நிமிடம் நன்கு ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவி பின் நனைத்த துண்டினால் அக்குளைத் துடைத்து எடுக்க வேண்டும்.

இந்த முறையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள முடிகள் உதிர்ந்து விடும்.

மற்றொரு முறை:

ஒரு பௌலில் பேக்கிங் சோடாவை மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து அதை இரவில் படுக்கும் முன் அக்குளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள முறைகளை வாரத்திற்கு 2-3 முறைகள் பின்பற்றி வந்தால், அக்குளில் முடி வளர்வதையும், கருமையையும் தடுக்கலாம்.

Related Articles

Close