அழகு..அழகு..புதியவை

முடி அடர்த்திக்கு செம்பருத்தி பவுடர் ஹேர் பேக் பொருத்தமா இருக்கும், இனியாவது யூஸ் பண்ணுங்க!

தங்கபஸ்பம் என்று அழைக்கப்படும் செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்களும் அழகு தரும் குணங்களும் ஏற்கனவெ அறிந்ததுதான். இதை உள்ளுக்குள் எடுத்துகொள்வதன் மூலம் ஏராளமான உடல் ஆரோக்கியம் கிடைப்பது போலவே கூந்தலுக்கும்
சருமத்துக்கும் கூட பல அற்புதங்களை செய்து வருகின்றன. கூந்தலுக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து நிறைவாக இருந்தால் கூந்தல் வளர்ச்சியில் குறையில்லாமல் நீண்டு வளரும். நீளமான கூந்தல் வேண்டும் என்பவர்கள் தலைக்கு செம்பருத்தி ஹேர் பேக் பயன்படுத்தினால் கூந்தல் வனப்பாகவே இருக்கும்.

​நெல்லி சாறு

நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்தது. இது கூந்தல் வளர்ச்சியில் அபரிமிதமான பங்கு கொடுக்ககூடியது. இது கூந்தல் பிரச்சனைகளான வறட்சி, உதிர்வு, மெலிவு பிரச்சனைக்கு தீர்வு கொடுக்ககூடியது.

குறிப்பாக கூந்தலில் உண்டாகக்கூடிய இளநரையை தடுக்க உதவக்கூடியது. இளவயது முதலே நெல்லிக்காயை கூந்தலுக்கு பயன்படுத்தினால் நரைமுடி பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். நெல்லிசாறு பயன்படுத்தி ஹேர்டை தயாரிக்கும் முறை குறித்து பார்த்தோம். நெல்லிக்காயை கூந்தலுக்கான எண்ணெய் காய்ச்சுவதற்கும், ஹேர்டை பயன்பாட்டுக்கும் பயன்படுத்திவருவது போன்று கூந்தல் ஹேர் பேக் அனைத்துக்கும் பயன்படுத்தலாம்.

நெல்லிக்காய் சாறு தேவையான அளவு

செம்பருத்தி பவுடர்

தங்கபஸ்மான செம்பருத்தி இதழை மட்டும் தனியாக எடுத்து நிழலில் உலர்த்தி பொடித்து வைக்க வேண்டும். செம்பருத்தி பூக்களை மொத்தமாக வாங்கி பொடித்து வைக்க வேண்டும். செம்பருத்தி பூக்கள் கிடைக்காவிட்டால் நாட்டு மருந்து கடையில் கிடையில் செம்பருத்தி பூக்கள் பொடி கிடைக்கும். இதை சருமத்துக்கும் ஃபேஸ் பேக் போன்று பயன்படுத்தலாம்.

செம்பருத்தி பொடி சருமம் போன்றே கூந்தலுக்கும் ஹேர் பேக் போன்று பயன்படுத்தினால் கூந்தலின் வளர்ச்சியும் அடர்த்தியும் அதிகமாக இருக்கும். கூந்தல் பிசுபிசுப்பு , எண்ணெய் பசை, அழுக்கு போன்றவற்றை சுத்தமாக நீக்கும் குணம்செம்பருத்தி பூவுக்கு உண்டு.

தேவை – 30 கிராம் அளவு. ( இதை மொத்தமாக வாங்காமால் அவ்வபோது வாங்கி பயன்படுத்துவது நல்லது)

தயிர்

பசுந்தயிர் இயற்கையான ப்ளீச் ஆக செயல்படக்கூடியது. சருமத்தில் இறந்த செல்களை நீக்குவது போன்று கூந்தலில் இருக்கும் அழுக்கையும் நீக்கும் கூந்தலில் இருக்கும் பொடுகு, செதில் உதிர்வு போன்றவற்றையும் நீக்கிவிடகூடியது. பொடுகு பிரச்சனை இருந்தால் வெறும் தயிரை மட்டுமே கொண்டு பராமரிப்பு செய்துவிடலாம். கூந்தல் வளர்ச்சிக்கு தயிரின் பங்கும் முக்கியமானது என்பதால் கூந்தல் ஹேர் பேக் அனைத்திலும் தயிரை பயன்படுத்தலாம்.

தேவை -அரை கப் கெட்டித்தயிர்

ஹேர் போக் போடும் முறை

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சாறு பிழிந்தெடுக்கவேண்டும். செம்பருத்தி பவுடரில் நெல்லிச்சாறு, கெட்டித்தயிர் கலந்து பேஸ்ட் போல் குழைத்து வைத்து ஒரு டீஸ்பூன் அளவு சுத்தமான விளக்கெண்ணெய் அல்லது தேங்காயெண்ணேய் கலந்து வைக்கவும். இதை கூந்தல் முழுவதும் ஸ்கால்ப் பகுதி முழுவதும் தடவி கூந்தல் நுனி வரை தடவ வேண்டும். 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை கூந்தலில் ஊறவிட்டு பிறகு கூந்தலை மென்மையான ஷாம்பு கொண்டு அலசி எடுக்க வேண்டும்.

வாரம் ஒரு முறை அல்லது மாதம் இருமுறை செய்துவந்தால் கூட போதுமானது. தொடர்ந்து இரண்டு முறை இந்த பேக் போட்டாலே கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்கும். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட இந்த செம்பருத்தி ஹெர் பேக் போடலாம். வளரும் பிள்ளைகளுக்கும் இதை போடலாம். உடனே ட்ரைபண்ணுங்க!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker