சமையல் குறிப்புகள்புதியவை
தித்திப்பான பீட்ரூட் பாயாசம்
தேவையான பொருட்கள்
- பீட்ரூட் – 200 கிராம்
- பால் – 1 கப்
- நெய் – கால் கப்
- சீனி – 3/4 கப்
- பொடியாக்கப்பட்ட ஏலக்காய் – தேவையான அளவு
- முந்திரி, திராட்டை, பாதாம் – விருப்பத்திற்கு ஏற்ப
செய்முறை
- பீட்ரூட்டை தோல் நீக்கி அரைத்து கொள்ளவும்.
- பாதாமை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் நெய் சேர்த்து சூடானதும் அதில் நறுக்கிய முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
- பின்பு அதில், அரைத்த பீட்ரூட் சேர்த்து நன்கு கிளறவும்.
- அடுத்து அதில் இன்னும் சிறிது நெய், ஏலக்காய் தூள் சேர்த்து நடுத்தர தீயில் சமைக்கவும்.
- 5 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு கப் கிரீமி பால் சேர்த்து 10 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.. தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்து கொள்ளலாம்.
- பீட்ரூட் மென்மையாக மாறியதும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
- சர்க்கரை நன்றாக கரைந்ததும் இரண்டு டீஸ்பூன் நெய், வறுத்த முந்திரி, திராட்டை, பாதாம் சேர்த்து கிளறி இறக்கினால் பீட்ரூட் பாயாசம் தயார்.