சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவை

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: ஜவ்வரிசி பாயாசம்

தமிழ் புத்தாண்டிற்கு எளிய முறையில் இனிப்பு செய்ய விரும்பினால் ஜவ்வரிசி பாயாசம் செய்யலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: ஜவ்வரிசி பாயாசம்
ஜவ்வரிசி பாயாசம்
தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – 200 கிராம்

சர்க்கரை – 250 கிராம்
தண்ணீர் – 500 மி.லி.
தேங்காய் – அரை மூடி (துருவி பால் எடுக்கவும்)
முந்திரிபருப்பு – தேவையான அளவு
ஏலக்காய் – தேவையான அளவு

ஜவ்வரிசி பாயாசம்

செய்முறை

அடுப்பில் கொதிக்கும் வெந்நீர் வைத்து, அதில் ஜவ்வரிசியைப் போட்டு கைவிடாமல் கிளறவும்.

ஜவ்வரிசி வெந்ததும், சர்க்கரை, ஏலக்காய் சேர்க்கவும்.

பாயாசம், பாகு வாசனை வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, தேங்காய்ப் பாலை அதில் சேர்த்துக் கிளறவும்.

நெய்யில் முந்தரி வறுத்து பாயாசத்தில் போடவும்.

சுவையான ஜவ்வரிசி பாயாசம் தயார். சூடாக பரிமாறவும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Articles

Close