தாய்மை-குழந்தை பராமரிப்பு

குழந்தை மண் சாப்பிட காரணம்

பொதுவாக குழந்தைகளுக்கு ஒரு வயது நெருங்கும் சமயத்திலிருந்து இரண்டு வயது வரை கண்ணில் கண்டதை எல்லாம் எடுத்துப் பார்க்கும் பழக்கமும், கடித்துப் பார்க்கும் பழக்கமும் இருக்கும். அதையும் கடந்து ஒரு சில பொருட்களை விரும்பி ரசித்து ருசித்து சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்வார்கள். முறையாக உண்ண வேண்டிய உணவைத் தவிர்த்து இத்தகைய பழக்கத்துக்குட்பட்டால் அது வளரும் பருவத்தில் உடல்நலப் பிரச்னைகளை உருவாக்கும். குழந்தைகளுக்கு எளிதாகக் கிடைக்கும் பொருள் தரையில் இருக்கும் மண், தூசு போன்றவை. இவ்வாறு மண் தின்னும் பழக்கம் PICA என்று அழைக்கப்படுகிறது.ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடமே இப்பழக்கக் கோளாறு அதிகம் காணப்படுகிறது. பெற்றோரின் அன்பு மற்றும் அரவணைப் பின்மை, பாதுகாப்பற்ற உணர்வு, பெற்றோர் உணவூட்டும் பழக்கங்களிலுள்ள குறைபாடுகள், ரத்தசோகை, மனவளர்ச்சிக் குறைபாடு போன்ற காரணங்களால் மண் தின்னும் பழக்கம் உருவாகி, வளர்ந்து நீடிக்கிறது.

குழந்தைகளின் தோற்றம் செயல்பாடு, மனநிலைகளுக்கேற்ப, கல்கேரியா கார்ப், சிலிகா, சிகூடா, அலுமினா, பெர்ரம்மெட், நேட்ரம்மூர், சினா, கல்கேரியாபாஸ், நைட்ரிக் ஆசிட், நக்ஸ்வாமிகா போன்ற ஹோமியோபதி மருந்துகள் மண், சாம்பல் தின்னும் பழக்கத்தை மாற்றியமைக்க உறுதியாக உதவும்.


Related Articles

Close