சமையல் குறிப்புகள்

சிவப்பரிசி இனிப்பு புட்டு

தேவையான பொருட்கள் :

  • சிவப்பு புட்டரிசி மாவு – 1 கப்
  • சர்க்கரை – தேவையான அளவு
  • தேங்காய் துருவல் – கால் கப்
  • ஏலக்காய்தூள் – அரை டீஸ்பூன்
  • நெய் – சிறிதளவு




செய்முறை:

  • சிவப்பு புட்டரிசி மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து அதனுடன் ஏலக்காய் தூளையும் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பின்னர் அதனுடன் நெய் சேர்த்து கிளறவும்.
  • புட்டு குழாயில் மாவு கலவை, சிறிதளவு சர்க்கரை, தேங்காய் துருவல் ஆகிய மூன்றையும் வரிசையாக போட்டு வேக வைத்து இறக்கவும்.
  • சுவையான சிவப்பரிசி இனிப்பு புட்டு தயார்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker