சமையல் குறிப்புகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் கருணைக்கிழங்கு வடை

தேவையான பொருட்கள் :

  • பொட்டுக்கடலை – 150 கிராம்,
  • கருணைக்கிழங்கு – 200 கிராம்,
  • பெரிய வெங்காயம் – 2,
  • பச்சை மிளகாய் – 2,
  • சமையல் சோடா – ஒரு சிட்டிகை,
  • இஞ்சி – பூண்டு விழுது, கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
  • பட்டை, சோம்பு – சிறிதளவு,
  • எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு,
  • உப்பு – தேவைக்கேற்ப.




செய்முறை:

  • கருணைக்கிழங்கைத் தோல் சீவி, நன்றாகக் கழுவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.
  • ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பொட்டுக்கடலையை ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும்.
  • இவற்றுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சோம்பு, உப்பு, இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, சமையல் சோடா சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து வடை மாவு பதத்துக்குப் பிசையவும்.
  • வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.





Show More

Related Articles

Close