ஃபேஷன்புதியவை

வீட்டிலேயே கோல்டு ஃபேஷியல் செய்வதற்கான சுலபமான வழி இதோ

இந்த காலத்து பெண்கள் மாதந்தோறும் என்ன வேலை செய்கிறார்களோ என்னவோ, ஆனால் மாதந்தோறும் பியூட்டி பார்லர் போவதற்கு மட்டும் மறக்கவே மாட்டார்கள். ஹய்யய்யோ, இந்த மாதம் பார்லர் போய் பேஷியல் செய்ய மறந்துட்டேன் என்று எந்த பெண்ணாவது கூறி கேட்டிருப்பீர்களா? வாய்ப்பே இல்லை. சாப்பிட மறந்தாலும் மேக்கப் போட மறக்காத பெண்கள் இருக்கும் தலைமுறை இது.

இந்த சூழலில் கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தின் காரணமாக நாடே ஊரடங்கில் உள்ளது. இப்பொழுது வெளியே சென்றாலும் பார்லர் திறந்திருக்காதே என்ன செய்வது என்று யோசித்திருக்கும் பெண்கள் ஏராளம்.
பெண்ணிற்கு அழகு பராமரிப்பது என்பது தான் மிக முக்கிய வேலையாகும். பெண்ணின் புற அழகு தான் அவர்களுக்கு ஒருவித தன்னபிக்கையை வழங்குகிறது என்று கூட சொல்லலாம். இன்றைய சுற்றுப்புற சூழல் கூட இதற்கு காரணமாகிவிட்டது. சருமத்தை பராமரிக்காவிட்டால், நிச்சயம் சரும பாதிப்பு ஏற்பட தான் செய்யும். அதனால், பெண்களை தவறு கூறவே முடியாது. கூடவும் கூடாது. சரி, ஊரடங்கு உத்தரவு உள்ளது. இந்த சமயத்தில் என்ன தான் செய்வது என்று கேட்பது புரிகிறது.

மாதந்தோறும், ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து பேஷியல் முதல் பெடிக்யூர், மெனிக்யூர் செய்தது எல்லாமே செய்தது போதும். இப்போது வீட்டிலேயே பைசா செலவில்லாமல், அதுவும் சற்று விலையுயர்ந்த கோல்டு பேஷியல் செய்ய கற்று தருகிறோம். இதை மட்டும் ஒரு முறை ட்ரை செய்தால் நீங்கள், இனி வாழ்நாள் முழுவதும் வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்வீர்கள்.

பார்லர் சென்று பிறர் நமக்கு பேஷியல் செய்து விடும் போது மிகவும் நன்றாக தான் இருக்கும். ஆனால், இப்போது தான் வெளியே போக முடியாதே. அதனால் இப்போது சொல்லப்போவது போல் செய்தால் முகத்தின் கருமை நீங்கி தங்கத்தை போன்ற ஜொலிக்கும் சருமத்தை வீட்டில் இருந்தபடியே பெற்றிடலாம்.

இங்கு கோல்டு பேஷியல் செய்வதற்கான 4 வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் வீட்டிலிருக்கும் பொருட்கள் தான். இதற்காக வெளியே செல்ல வேண்டுமென்ற அவசியமே இல்லை. வாருங்கள், வீட்டிலேயே கோல்டு பேஷியல் எப்படி செய்வதென்று பார்ப்போம்…

வழிமுறை 1: முகத்தை சுத்தப்படுத்துவது

தேவையான பொருள்:

* பால் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* காய்ச்சாத பச்சை பாலை, ஒரு பஞ்சு உருண்டையில் நனைத்து முகத்தில் தேய்க்க வேண்டும்.

* பின்னர், ஒரு ஈரமான கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு முகத்தை துடைத்திடவும்.

வழிமுறை 2: ஃபேஸ் ஸ்க்ரப்

தேவையானப் பொருட்கள்:

* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

* சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்

* தேன் – ½ டீஸ்பூன்

செய்முறை:

* ஒரு சுத்தமான பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்.

* இப்போது ஸ்க்ரப் தயார். அதனை கைகளை உபயோகித்து முகத்தில் தடவி லேசாக தேய்க்க வேண்டும்.

* அதன் பின்னர், முகத்தை தண்ணீர் மற்றும் பஞ்சு உபயோகித்து துடைத்திடவும்.

வழிமுறை 3: ஃபேஸ் மசாஜ் க்ரீம்

தேவையானப் பொருட்கள்:

* கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

* ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* மசாஜ் க்ரீம் செய்வதற்கு முதலில், மேலே கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சுத்தமான பௌல் ஒன்றில் போட்டு, ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

* இப்போது தயார் செய்து வைத்துள்ள அந்த க்ரீமை முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு தொடர்ந்து மசாஜ் செய்யவும்.

* பின்னர், மென்மையான டிஸ்யூ அல்லது பஞ்சு கொண்டு முகத்தை துடைத்திடவும்.

வழிமுறை 4 : ஃபேஸ் மாஸ்க்

தேவையானப் பொருட்கள்:

* மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

* கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்

* பால் – 2 டேபிள் ஸ்பூன்

* ரோஸ் வாட்டர் – 1 டேபிள் ஸ்பூன்

* தேன் – 1 டீஸ்பூன் (எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தேனை தவிர்த்திடலாம்)

செய்முறை:

* மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்கள் ஒரு சுத்தமான பவுளில் போட்டு நன்கு கலந்து வைத்து கொள்ளவும்

* இப்போது இந்த பேஸ்டை முகத்தில் தடவி, 20 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

* பின்னர், தண்ணீர் கொண்டு முகத்தை கழுவிடவும்.

குறிப்பு

இப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து வந்தால், முகம் பிரகாசமாக ஜொலிப்பதோடு, மிருதுவாகவும் மாறிவிடும். ஒரு முறை செய்வதன் மூலம் நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள். அதுமட்டுமல்லாது, பார்லரில் கொடுக்கும் பணம் இனி முழுவதும் மிச்சமாகும். ஊரடங்கு காலத்தில் இது போன்று முயற்சி செய்வது கூட நன்றாக தானே இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker