அழகு..அழகு..

ஐந்தே நிமிடங்களில் அழகான கூந்தல் அலங்காரம்

பெண்கள் கூந்தலை பேணிப் பாதுகாத்து, அடர்த்தியாக வளர்ப்பதே விதவிதமாக அலங்காரம் செய்துகொள்வதற்காகத்தான். புதிய கூந்தல் அலங்காரம் என்பது பெண்களுக்கு அழகை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும் தருகிறது. அதனால் பெண்கள் வித்தியாசமான கூந்தல் அலங்காரங்களை விரும்புகிறார்கள். அது விரைவாக செய்து முடிக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

1 முடியை நன்றாக சீவி ‘அயர்னிங் மெஷின்’ பயன்படுத்தி மென்மையாக ‘டச்’ செய்யுங்கள். நீளவாக்கிலான முடியைகொண்டவர்கள் ‘அயர்னர்’ பயன்படுத்தவேண்டியதில்லை. அகலமான பற்களைகொண்ட சீப்பைவைத்து நன்றாக சீவினாலே போதும். கூந்தலின் நுனிப் பகுதியில் மட்டும் பொருத்தமான நிறத்தில் ‘கலரிங்’ செய்திருந்தால், இந்த அலங்காரம் கூடுதல் அழகுதரும்.2 கூந்தலின் அடிப்பகுதியில் மட்டும் சின்னச்சின்ன சுருள்களை உருவாக்கலாம். அடிப்பகுதி கூந்தலை சிறுசிறு பிரிவுகளாகப் பிரித்து அதன் நுனிப் பகுதிகளில் மட்டும் சுருளை வட்டங்களைவைத்து சுருள் உருவாக்கவேண்டும். நடுப் பகுதியில் குறைந்த அளவு முடிகளில் கூடுதல் சுருள்களை உருவாக்கினால் பார்க்க அழகாக இருக்கும்.

3 உருவாக்கிய சுருளுக்கு உள்ளே விரலைவிட்டு இழுத்து, அதை அலைபோல் ஆக்கவேண்டும். இயற்கையான அழகுக்காக இவ்வாறு செய்யவேண்டும். அதன் பின்பு மேலே இருந்து சுருளாக்கப்பட்ட அனைத்து முடியையும் சீப்பால் சீவிவிடவேண்டும். இதுவும் ஒரு வித்தியாசமான அழகைத்தரும்.

4, வழக்கம்போல் ஓரமாக வகிடு எடுத்தோ, நடுவில் வகிடு எடுத்தோ தலையை சீவிக்கொள்ளலாம். உங்கள் முகத்திற்கு அது பொருந்துமா என்றெல்லாம் யோசிக்காதீர்கள். ஒரு நாள் நடுவகிடும், இன்னொரு நாள் ஓர வகிடுமாக எடுத்து அசத்துங்கள். ‘ஏய் உன் முகத்தில் ஏதோ நல்ல மாற்றம் தெரிகிறதே!’ என்று உங்கள் தோழிகளே சொல்வார்கள்.

Related Articles

Close