சமையல் குறிப்புகள்

சிக்கன் கோலா உருண்டை குழம்பு

தேவையான பொருட்கள் :

  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • மல்லி தூள் – 1 ஸ்பூன்
  • பட்டை – 2
  • கிராம்பு – 2
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • பெரிய வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • புளி – சிறிது நெல்லிக்காய் அளவு
  • பூண்டு – சிறிது அளவு
  • இஞ்சி – சிறிது அளவு
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • கசகசா – 1 டீஸ்பூன்

உருண்டைக்கு அரைக்க வேண்டிய பொருட்கள்:

  • சிக்கன் (எலும்பில்லாதது) – கால் கிலோ
  • வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 3
  • சோம்பு – 1 ஸ்பூன்
  • மிளகு – 1 ஸ்பூன்
  • பொட்டுக் கடலை – 2 ஸ்பூன்
  • தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பின்பு தேங்காய் துருவல், சோம்பு கசகசா, இஞ்சி மற்றும் பூண்டு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து தனியாக வைக்கவும்.
  • பின்பு உருண்டைக்கு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும அதில் பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின்பு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு குழைய வதக்கவும்.
  • வதக்கிய பின்பு அதில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் குழம்புக்கு அரைத்து வைத்த மசாலாவை அதில் ஊற்றி கொதிக்க விடவும்.
  • குழம்பு கொதித்த பின்பு அதில் உருண்டைக்கு அரைத்து வைத்ததை சிறு சிறு உருண்டையாக உருட்டி குழம்பில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.
  • இப்போது ருசியான சிக்கன் உருண்டை குழம்பு தயார்.

Related Articles

Close