ஆரோக்கியம்டிரென்டிங்புதியவை

இதுவரை கொரோனாவால் பெண்களை விட ஆண்களே அதிகம் இறந்துள்ளனர் ஏன் தெரியுமா? அதிர்ச்சியளிக்கும் காரணம்…!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ்தான் இன்று உலகின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதுவரை பல்லாயிரம் உயிர்களை பலிகொண்டு விட்ட கொரோனா வைரஸ் பல நாடுகளில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. உயிரிழப்புகள் மட்டுமின்றி உலக பொருளாதாரத்தையும் கொரோனா வைரஸ் வெகுவாக பாதித்துள்ளது.

Why Coronavirus Kills More Men Than Women?

கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக இறங்கியுள்ளது. சீனாவில் கொரோனாவின் தாக்கம் இப்போது ஓரளவிற்கு குறைந்துள்ளது. இன்று வெளிவந்த தகவலின் படி A வகை இரத்தம் உள்ளவர்கள் O வகை இரத்தம் உள்ளவர்களை விட அதிக கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் பெண்களை விட ஆண்களுக்கு அதிக பாதிப்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது.

சீனாவின் ஆராய்ச்சி

சீனாவின் ஆராய்ச்சி

சீனாவின் புதிய ஆராய்ச்சியில் பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு குறிப்பாக நடுத்தர வயதில் இருக்கும் ஆண்களுக்கு கொரோனவை எதிர்த்து போராடும் திறன் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீன ஆய்வாளர்களின் ஆராய்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்களிடையே நோய்த்தொற்று விகிதம் ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண்களில் இறப்பு விகிதம் 2.8% ஆகவும், பெண்களுக்கு 1.7% ஆகவும் உள்ளது. 80 வயதிற்கு மேற்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் 0.2% இறந்துள்ளனர்.

பெண்களுக்கு ஆபத்து குறைவா?

பெண்களுக்கு ஆபத்து குறைவா?

பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு ஆண்களுடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது அல்லது அவர்களின் உடல் வைரஸை சமாளிக்க அதிக திறன் கொண்டதாக உள்ளதென ஆய்வுகள் கூறுகிறது. அதேசமயம் குழந்தைகளும் இந்த நோய்த்தொற்றில் இருந்து ஆண்களுடன் ஒப்பிடும் போது பாதுகாப்பாகவே உள்ளனர். அதற்கு காரணம் அவர்கள் ஆர்மபத்திலேயே கவணைக்கப்படுகிறார்கள் மற்றொன்று பெற்றோர்கள் நோயுற்றவர்களிடம் இருந்து அவர்களை விலக்கி வைத்திருப்பதாகும்.

பெண்களை பாதுகாப்பது எது?

பெண்களை பாதுகாப்பது எது?

கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இறப்பு விகிதம் வித்தியாசமாக இருப்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். காய்ச்சல் உள்ளிட்ட பரவலான தொற்றுநோய்களிலும் இதே விளைவை காணலாம். இதற்கான பதிலின் ஒரு பகுதி பெண்கள் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களை தவிர்த்து ஆண்களை விட ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து வாழ்கின்றனர். சீனாவில் 53 சதவீத ஆண்கள் புகைபிடிக்கின்றனர், பெண்களில் 3 சதவீதத்தினர் மட்டுமே புகைபிடிக்கின்றனர். ஆண், பெண் நோயெதிர்ப்பு மண்டலங்களில் இருக்கும் வித்தியாசங்களும் இதற்கு ஒரு காரணமாகும். சில தொற்றுநோய்களுக்கு எதிராக பெண்களின் உடலே ஆன்டிபாடிகளை உருவாக்கும் திறன் கொண்டது.

கர்ப்பத்தில் ஏதேனும் ஆபத்துகள் உள்ளதா?

கர்ப்பத்தில் ஏதேனும் ஆபத்துகள் உள்ளதா?

இதற்கு அதிகாரப்பூர்வமாக பதில் இல்லை, ஆனால் நிபுணர்கள் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். கர்ப்பகாலம் பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இதில் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனப்படுவது முக்கியமான ஒன்றாகும். ஒரே வயதில் இருக்கும் பெண்களில் கர்ப்பமாக இல்லாத பெண்களைக் காட்டிலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எளிதில் தொற்றுநோய்க்கு ஆளாக வாய்ப்புள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்படுவதற்கான “வெளிப்படையான அறிகுறி எதுவும் இல்லை” என்று இங்கிலாந்து அரசு கூறுகிறது. இருப்பினும், கர்ப்பிணி பெண்கள் இந்த காலக்கட்டத்தில் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது.

குழந்தைகளை கொரோனா எளிதில் தாக்குமா?

குழந்தைகளை கொரோனா எளிதில் தாக்குமா?

உண்மைதான், குழந்தைகள் எளிதில் கொரோனவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, குறிப்பாக பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு இந்த ஆபத்து அதிகம் உள்ளது. குழந்தைகளில் COVID-19 இன் அறிகுறிகள் குறித்து மிகக் குறைந்த தகவல்களே உள்ளன, லேசான காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பொதுவாக குழந்தைகள் எளிதில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகலாம், அதிலும் 2 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த ஆபத்து மிகவும் அதிகம். நோயெதிர்ப்பு மண்டலம் முழுமை பெறாமல் இருப்பதால்தான் இந்த குறைபாடு ஏற்படுகிறது.

கொரோனா வைரஸ் ஏன் கொடியது?

கொரோனா வைரஸ் ஏன் கொடியது?

கொரோனா வைரஸ் காய்ச்சல் மற்றும் இருமலுடன் தொடங்குகிறது. இவை குளிர்காலத்தில் நம்மில் பலர் சாதாரணமாக பார்க்கும் அறிகுறிகளாகும். ஆனால் இந்த வைரஸ் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகம் வேலை செய்ய வைக்கும். இதன் மிகவும் கடுமையான அறிகுறிகளில் ஒன்று நுரையீரலில் பரவலான அழற்சியால் ஏற்படும் கடுமையான சுவாசக் குழாய் நோய்க்குறி ஆகும். அழற்சி என்பது ஒரு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும் தன்னை சரிசெய்வதற்குமான நேரம் என்பதை உடல் எவ்வாறு சமிக்ஞை செய்கிறது. அழற்சி ஒரு சிறந்த சமநிலைப்படுத்தும் செயல். அது தவறாக நடந்தால், நீங்கள் இறந்துவிடுவீர்கள். இந்த வைரஸ் உறுப்புகளின் அழற்சியை சீர்குலைக்கிறது, மேலும் கடுமையான வீக்கமடைந்த உறுப்புகளால் அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்ய முடியாது. இது நுரையீரலில் போதுமான ஆக்ஸிஜனைப் பெற முடியாமல் கார்பன் டை ஆக்சைடை இரத்தத்திலிருந்து வெளியேற்றுகிறது. இது சிறுநீரகங்களை இரத்தத்தை சுத்தம் செய்வதைத் தடுக்கிறது மற்றும் உங்கள் குடலின் புறணிக்கு சேதம் விளைவிக்கிறது. வைரஸ் தீவிரமடையும்போது ஒவ்வொரு உறுப்பாக செயலிழப்பு அடைகிறது. இறுதியில் மரணத்தை ஏற்படுத்துகிறது.

வயதானவர்கள் ஏன் இறக்கிறார்கள்?

இது இரண்டு விஷயங்களின் கலவையாகும், ஒன்று பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் மற்றொன்று வைரஸை சமாளிக்க முடியாத உடல். நமது வயதிற்கேற்ப நமது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைகிறது. 20 வயதில் இருப்பவர்கள் உடல் உருவாக்கும் ஆன்டிபாடிஸ்க்கும் 70 வயதில் இருப்பவர்களின் உடல் உருவாக்கும் ஆன்டிபாடிஸ்க்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. வயதான ஆண்கள் அதிக அளவு வீக்கத்திற்கு ஆளாகக்கூடிய சூழ்நிலைகள் உள்ளது, அவை ஆபத்தானவை. நீங்கள் 95 வயதாக இருந்தால், உங்கள் சிறுநீரக செயல்பாடு ஏற்கனவே இருந்ததில் 60% ஆக இருந்தால், புதிய வைரஸ் தொற்று ஏற்படும்போது அது தேவையான அளவிற்கு செயல்படாது. இது இறுதியில் மரணத்தை ஏற்படுத்தும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker