ஃபேஷன்உறவுகள்டிரென்டிங்

காதலர்களே! காதலர் தினத்துக்கு இந்த ரொமாண்டிக்கான விஷயங்களை செய்து உங்க லவ்வர அசத்துங்க…!

பெரும்பாலான இளைஞர்களுக்கு ஒரு ஆண்டில் பிடித்த மாதம் எது என்று கேட்டால்? அனைவரும் கூறுவது பிப்ரவரி மாதம் தான். உறவிலும் சரி, காதலிலும் சரி, ஒரு வருடத்தின் மிக அழகான பல நினைவுகளை இம்மாதத்தில்தான் அதிகம் வெளிபடுத்துவார்கள். ஒவ்வொருவரும் தங்கள் காதலை மிக அழகாகவும், அன்பாகவும் வெளிபடுத்தும் இம்மாதத்தை யார்தான் விரும்ப மாட்டார்கள். குறிப்பாக பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் மிக கோலாகலமாக கொண்டாடும் தினம் காதலர் தினம்.

காதலர் தினம் நெருங்கிவிட்டதால், தங்கள் காதலன் அல்லது காதலிக்கு இந்த காதலர் தினத்தில் என்ன பரிசு அளிக்கலாம் அல்லது இந்த தினத்தை எப்படி மகிழ்ச்சியாக கொண்டாடலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பீர்கள். காதலர் வாரம் நாளை (பிப்ரவரி 7) தொடங்கி பிப்ரவரி 14 வரை நடைபெறுகிறது. உங்கள் காதலர் வாரத்தை அழகாக திட்டமிட உதவும் சில உதவிக்குறிப்புகளை நாங்கள் இக்கட்டுரையில் பட்டியலிட்டுள்ளோம். இது நிச்சயமாக உங்கள் துணை இன்னும் உங்களை அதிகமாக நேசிக்க உதவும்.

ரோஜா தினம் (ரோஸ் டே)

பிப்ரவரி 7ஆம் தேதி ரோஸ் டே. ரோஜா பூ காதல் சின்னம் மற்றும் அடையாளம் என்பது அனைவராலும் அறியப்பட்டது. ஒருவர் தங்களின் வெளிபடுத்தும்போது, அழகான ரோஜாவை வைத்துதான் “ஐ லவ் யூ” என்று சொல்வார்கள். இந்த இனிமையான அழகான நாளில் உங்கள் காதலன் அல்லது காதலிக்கு ரோஜா பூச்செண்டை பரிசாக வழங்கலாம் மற்றும் அதில் சில சிறு குறிப்புகளை ஒட்டலாம், மேலும் நீங்கள் அவர்களை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறீர்கள் என்பதைக் குறிப்பிடலாம். உங்கள் துணைக்கு இன்ப ஆச்சரியத்தை கொடுக்க நீங்கள் வரும்பினால், உங்கள் படுக்கையறையை சில புதிய ரோஜா இதழ்கள் மற்றும் பிற பூக்களால் அலங்கரிக்கலாம். இது தவிர, உங்கள் அன்பும் அக்கறையும் ரோஜாக்களைப் போல அழகாகவும் தீவிரமாகவும் இருப்பதாக உங்கள் துணை உணரக்கூடும். உங்கள் உறவில் அன்பையும் காதலையும் இந்த இனிய நாளில் ஊக்குவியுங்கள்.

புரபோசல் டே

ரோஸ் டேவிற்கு அடுத்த நாள் புரபோசல் டே. உங்கள் காதலன் அல்லது காதலி மீதான உங்கள் அன்பை வெளிப்படுத்த காதலர் வாரத்தின் சிறந்த நாட்களில் புரபோசல் டே ஒன்றாகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக புரபோசல் செய்வார்கள். அதை எவ்வளவு செலவில் செய்கிறார்கள் என்பது முக்கியமல்ல. ஒரு நேர்மையான அன்பு கொண்ட இதயம் கண்டிப்பாக உணர்வுகளை ஏற்படுத்தும். மேலும், நீங்கள் ஏற்கனவே ஒரு உறவில் இருந்தால், நீங்கள் இன்னும் உங்கள் துணை மீது அன்பை வெளிப்படுத்தலாம். உங்கள் கூட்டாளருடன் நீங்கள் இனிமையான விஷயங்களைப் பேசலாம் மற்றும் உங்கள் உறவு எவ்வளவு அழகாக இருந்தது என்பதை அவருக்கு அல்லது அவளுக்குத் தெரியப்படுத்துங்கள். இதற்காக, நீங்கள் உங்கள் கூட்டாளருக்கு ஒரு கடிதம் எழுதலாம் அல்லது வாழ்த்து அட்டை செய்து கொடுக்கலாம்.

சாக்லேட் டே

பிப்ரவரி 9ஆம் தேதி சாக்லேட் தினம். இந்த சாக்லேட் தினத்தில் காதலர்கள் அல்லது தம்பதிகள் பொதுவாக ஒருவருக்கொருவர் சாக்லேட்டுகளை பரிசளிப்பதை நாம் பொதுவாகக் காண்கிறோம். ஆனால் உங்கள் துணைக்கு நீங்கள் ஒரு இனிப்பு உணவைத் தயாரிப்பதன் மூலம் அதைக் கொண்டாடலாம். உங்களுக்கு செய்ய தெரியவில்லை என்றால், உங்கள் அம்மாவிடம் கேட்டோ அல்லது யூடியூப் பார்த்தோ சமைக்கலாம். இது அவர்களின் இதயத்தை வெல்வது மட்டுமல்லாமல், உங்களுக்குள் நெருக்கம் அதிகமாகும்.

டெடி டே

சாக்லெட் தினத்திற்கு அடுத்த நாள் டெடி டே. உங்கள் துணையிடமிருந்து ஒரு டெடியைப் பெறுவது அவர்கள் உங்களை நேசிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் உங்களை மிகவும் காதலிக்கிறார் என்பதாகும். மேலும், நீங்கள் உங்கள் துணையிடமிருந்து விலகி இருந்தால், அவர்கள் கொடுத்த டெடியைக் கட்டிப்பிடிப்பது நிச்சயமாக உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். உடலுறவைத் தவிர வேறு சில நெருக்கங்களை வளர்த்துக் கொள்ளவும் கட்லிங்கிற்கும் டெடி உதவக்கூடும்.

வாக்குறுதி தினம் (ப்ராமிஸ் டே)

காதலர் தினத்திற்கு 3 நாட்களுக்கு முன்பு கொண்டாடப்படுவது ப்ராமிஸ் டே. உங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் வாக்குறுதியை அளிக்கலாம். இந்நாளில் உங்கள் துணைக்கு நீங்கள் எப்போதும் அவர்களுடன் இருப்பீர்கள் என்று உறுதியளிக்க முடியும். இந்த நாளில் உங்கள் கூட்டாளருக்கு நடைமுறை வாக்குறுதிகளை வழங்குவது நல்லது. நீங்கள் அதை மறக்கமுடியாததாக மாற்ற விரும்பினால், உங்கள் கூட்டாளருக்கு ஒரு கேண்டில் நைட் உணவிற்கு நீங்கள் அவரை அல்லது அவளை வெளியே அழைத்துச் செல்லலாம் அல்லது உங்கள் மொட்டை மாடியை மாலையில் சில மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து நிலவின் கீழ் உங்கள் ப்ராமிஸ்களை செய்யலாம்.

கட்டியணைக்கும் நாள்(ஹக் டே)

பிப்ரவரி 12 கட்டியணைக்கும் நாள். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு சிறந்த வழி அரவணைப்பு. எனவே உங்கள் கூட்டாளருக்கு உங்கள் காதல் மற்றும் இனிமையான உணர்வுகளை ஒரு நீண்ட அரவணைப்பின் மூலம் வெளிப்படுத்தலாம். இதற்காக, உங்கள் நாளைத் தொடங்குவதற்கு முன் உங்கள் கூட்டாளரை நீங்கள் கட்டிப்பிடிக்கலாம். உங்கள் துணை வேறொரு நகரத்தில் தங்கியிருந்தால், அவரை அல்லது அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நீங்கள் அங்கு செல்லலாம். மேலும், நீங்கள் அவரை அல்லது அவளை கட்டிப்பிடித்து அனைத்து எதிர்மறைகளையும் கோபங்களையும் அகற்றலாம். ஒருவருக்கொருவர் அரவணைக்கும்போது ஒருவருக்கொருவர் இனிமையான விஷயங்களைச் சொல்லலாம்.

முத்த தினம்(கிஸ் டே)

காதலர் தினத்திற்கு முதல் நாள் முத்த தினம். ஒரு உறவில் காதலை வெளிபடுத்த முத்த பரிமாற்றம் மிக அவசியம். அன்பின் முத்தத்தை விட காதல் எதுவாக இருக்கும்? நீங்கள் உங்கள் காதலன் அல்லது காதலிக்கு உதடு, கன்னம், நெற்றி என முத்தங்களை கொடுத்து உங்கள் அன்பை வெளிபடுத்தலாம். நீங்கள் உங்கள் துணையின் நெற்றியில் முத்தமிட்டு, அவரை உங்கள் வாழ்க்கையில் வைத்திருப்பது எவ்வளவு பாக்கியம் என்று அவர்களுக்குச் சொல்லலாம். நீங்கள் அழகான நினைவுகளை புதுப்பித்து பழைய புகைப்படங்களை பார்க்கலாம். நீண்டதொரு பயணம் செல்லலாம் மற்றும் அருகிலுள்ள சில இடங்களுக்கு செல்லலாம்.

காதலர் தினம்

பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் வாரத்தின் கடைசி நாள் மற்றும் மிக முக்கியமான தினமாகும். ஒரு உறவில், நீங்கள் உங்கள் காதலன் அல்லது காதலியை தன்னலமின்றி நேசிப்பது அவசியம். இந்த நாளைக் கொண்டாட, உங்கள் துணையை அவர் செல்ல விரும்புமும் அல்லது மிக அழகான இடத்திற்கு அழைத்துச் சென்று மறக்கமுடியாத நாளாக மாற்றலாம். அன்றைய நாள் முழுக்க உங்கள் காதலன் அல்லது காதலிக்காக செலவிடுங்கள். மிகுந்த அன்பை செலுத்தி இந்த காதலர் தினத்தை காதலுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

அனைவருக்கும் காதலர் வாரம் வாழ்த்துக்கள்!

Show More

Related Articles

Close