சமையல் குறிப்புகள்

குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லேட் இடியாப்பம்

தேவையான பொருட்கள் :

  • பச்சரிசி மாவு – அரை கப்
  • சாக்லேட் சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்
  • முந்திரி பருப்பு – 10 (சிறிதாக நறுக்கவும்)
  • நெய் – 2 டீஸ்பூன்
  • உப்பு – சிறிதளவு
  • தண்ணீர் – 1 கப்




செய்முறை:

  • அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
  • கொதிக்க தொடங்கியதும் நெய், உப்பு சேர்க்கவும்.
  • பின்னர் பச்சரிசி மாவை கொட்டி லேசாக கிளறி இறக்கவும்.
  • பின்னர் கட்டி பிடிக்காமல் கிளறி இடியாப்ப குழலில் போட்டு பிழிந்து ஆவியில் வேகவைத்து இடியாப்பத்தை உதிர்த்துக்கொள்ளவும்.
  • அதனுடன் சாக்லேட் சாஸ், முந்திரி பருப்பு தூவி கிளறி சுவைக்கவும்.






Show More

Related Articles

Close