ஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்

உடல் எடையை பற்றி அதிகம் யோசிச்சிட்டே இருந்தாலும் எடை குறையாது தெரியுமா?

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடும் பலரும், எதிர்பார்க்கும் முடிவுகளை பெற முடியாமல் போராடுகிறார்கள். ஏன் எடை குறையவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒரு நாளில் பல முறை, உடல் எடையை எப்படி குறைப்பது என்பது பற்றியே அதிகம் யோசித்துக் கொண்டு இருப்பது உடல் எடை குறைவதை கடினமாக்குகிறதாம்.

ஆம், எடை குறைப்பு முயற்சியின் போது பலரும் எதிர்கொள்ளக்கூடிய மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக இருப்பது, அதிகமாக அதைப்பற்றியே சிந்திப்பது தான். எடை இழக்கும் முயற்சி என்பது இயல்பாக நடக்க வேண்டியது. ஆனால் அடுத்த நாள் டயட்டில் என்ன சேர்ப்பது, எவ்வளவு நேரம் மற்றும் என்னென்ன உடற்பயிற்சிகள் செய்வது என்பது பற்றியே நீங்கள் சிந்தித்தால் வெயிட் லாஸ் குறித்து அதிகம் சிந்திக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இதைப் பற்றிய நிபுணரின் கருத்து: பிரபல மனநல ஆலோசகர் நிஷ்தா ஜெயின் கூறுகையில், எடை குறைக்கும் முயற்சிக்கும் உதவும் வகையில் இருக்கும் உணவுகளை பற்றி சிந்தித்து, மிக மிக தீவிரமாகவும், நுணுக்கமாகவும் ஆய்வு செய்து, டயட்டில் சேர்ப்பது, குற்றவுணர்ச்சியே இல்லாமல் எடை குறைக்க உதவும் என பலரும் நினைக்கலாம். ஆனால் இந்த பழக்கம் எதிர்பார்த்த அல்லாத விரும்பும் முடிவுகளைத் தராது. அதற்காக எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பது அர்த்தமல்ல; அதே நேரம் டயட்டை பற்றி அளவுக்கு அதிகம் சிந்திக்கவும் தேவையில்லை. ஆக மொத்தத்தில் அதிகம் சிந்திக்காமல் கொஞ்சம் கவனமாக உணவுகளை சேர்க்கும் பழக்கம் எடை இழப்பிற்கு உதவும்.

எடை குறைப்பு முயற்சி தாமதமாக முடிவுகளைத் தரும்: எடை குறைய வேண்டும் என்று அதிகமாக சிந்திப்பது சரியான முடிவுகளை பெறும் பாதைக்கு உங்களை கொண்டு செல்லலாம் அல்லது செல்லாமலும் இருக்கலாம். இறுதியில், எதிர்பார்க்கும் முடிவுகள் கிடைக்காமல் நீங்கள் ஏமாற்றமடையலாம். பொதுவாக அதிகப்படியான சிந்தனை பெரும்பாலான நேரங்களில் முடிவுகளை தாமதமாக்குகின்றன. அதிகமாக சிந்திக்கும் நபர்கள் அடிக்கடி கவலையால் பாதிக்கப்பட்டு, வழக்கமாக செய்ய வேண்டிய செயல்களை கூட சரியான நேரத்தில் செய்து முடிக்காமல் தாமதமாக செய்வார்கள்.

மனதளவில் திட்டமிட வேண்டாம்: எடை குறைக்க உதவும் ஆக்டிவிட்டீஸ்களை மனதளவில் திட்டமிடாமல், முறையாக ஷெட்யூல் செய்வதில் கவனம் செலுத்துங்கள். காலண்டர் ஆப் நோட்டிஃபிகேஷன் அல்லது ஃபிட்னஸ் வாட்ச் போன்றவற்றை பயன்படுத்தி வழக்கமான உடற்பயிற்சி அட்டவணையைப் பின்பற்றலாம். இந்தப் பழக்கம், எடை குறைக்க வேண்டும் என்ற உங்களுடைய இலக்குகளை அடையும் பாதையில் நீங்கள் இருப்பதை உணர்த்துகிறது. மேலும், இதனால் உங்கள் உடல் ஃபிட்டாக மாறுகிறது, உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுகிறது. ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளையே செய்து கொண்டிருக்காமல் உங்கள் உடற்பயிற்சி அட்டவணையில் பலவித பயிற்சிகளை சேர்த்து கொள்ளலாம்.

உங்களுடைய் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் ஓய்வு பற்றி குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் : ஜிம்மில் நீங்கள் பயற்சிகள் செய்வதற்கு முன்பும், பின்பும் என்ன செய்தீர்கள் என்று, உங்கள் பர்ஃபாமென்ஸ் பற்றி குறிப்பு எடுத்து கொள்ளலாம். காலப்போக்கில், நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களில் கவனம் செலுத்த இந்த குறிப்புகள் உதவும். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் நாளில் மட்டுமல்லாமல், ஓய்வு எடுக்கும் நாளையும் இதில் சே
அதிகப்படியான சிந்தனையால் எழும் குற்ற உணர்ச்சி: உங்கள் உடலின் பல பகுதிகளில் ஆங்காங்கே இருக்கும் கொழுப்பை பற்றி சிந்திப்பது மனரீதியாக உங்கள் ஆற்றலை பாதித்து விடும். இதனால் விரக்தி ஏற்படகூடும், இதிலிருந்து விடுபட நீங்கள் நன்றாக சாப்பிடுவீர்கள். உணவை பற்றி நினைப்பது பிரச்சனை இல்லை என்றாலும், உணவுடன் உங்கள் உறவை அதிகரிப்பதற்கு பதில் தடையாக இருக்கும் வடிவங்களையும் அடையாளம் காண முக்கியத்துவம் கொடுங்கள்.

எடை குறைக்கும் முயற்சியில் இருக்கும் போது உணவு தொடர்பாக அதிகம் சிந்திப்பதை நீங்கள் தொடரலாம் என்றாலும் மனதில் தோன்றும் குற்ற உணர்ச்சிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகம் சிந்திப்பதால் உங்களுக்கு ஏற்படும் எண்ணங்கள் உண்மைகள் அல்ல என உங்களுக்கு நீங்களே சொல்லி கொள்ளுங்கள். எப்போது உணவு என்பதை நீங்கள் எளிதாக எடுத்து கொள்கிறீர்களோ, அப்போது உங்கள் எடை இழப்பு பயணம் சிறப்பாக இருப்பதை உணர்வீர்கள் என்கிறார் நிஷ்தா ஜெயின்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker