சமையல் குறிப்புகள்

மீன் புட்டு

தேவையான பொருட்கள்:

  • மீன் – அரைகிலோ
  • இஞ்சி – 1 துண்டு
  • பெ.வெங்காயம் – அரைகிலோ
  • பச்சை மிளகாய் – 5
  • பூண்டு – 5 பல்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • கடுகு, உளுந்தம்பருப்பு – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • மீனை நன்றாக சுத்தம் செய்து இட்லி தட்டில் வேகவைத்து முள்ளை எடுத்து விட்டு உதிர்த்துக்கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டுவை கொட்டி வதக்கவும்.
  • அதைத்தொடர்ந்து வெங்காயம், மிளகாயை சேர்த்து வதக்கவும். ஓரளவு வதங்கியதும் உதிர்த்த மீன் கலவை, உப்பு சேர்த்து சிறுதீயில் வேகவைத்து இறக்கி பரிமாறலாம்.
  • சுவையான மீன் புட்டு தயார்.
Show More

Related Articles

Close