எடிட்டர் சாய்ஸ்

தோல்வி கற்று தந்த பாடம்

உழைப்பு, கல்வி, விளையாட்டு என எதுவாக இருந்தாலும் அனைவரும் விரும்புவது வெற்றியை தான். இந்த வெற்றியை மிகவும் எளிதாக நாம் பெற்று விடலாம்.

துவண்டு விட கூடாது

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. மிக கடுமையாக உழைப்பவர்கள் கூட சில நேரங்களில் தோல்வியை சந்திக்க நேரிடும். தோல்வியை கண்டு துவண்டு விட கூடாது.

தோல்வி ஏற்பட்டால் அது எதனால் ஏற்பட்டது, அதில் இருந்து விடுபட என்ன வழி? என தான் ஆராய வேண்டும். மற்றவர்களின் வெற்றியை கண்டு பொறாமை படுவதை காட்டிலும், அவர் எவ்வாறு வெற்றி பெற்றார் என ஆராய்ந்தால் நாமும் வெற்றி பெறலாம்.



ஏமாற்றம்

எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் பணபலம், ஆள் பலம் உள்ளவராக இருந்தாலும் அவருக்கும் ஏதாவது ஒரு இடத்தில் தோல்வி, ஏமாற்றம் இருக்க தான் செய்யும். எனவே தோல்வி ஏற்பட்டால் அதற்கான காரணம் என்ன என்று தீவிரமாக யோசிக்க வேண்டும். எங்கே தவறு நடந்துள்ளது என்பதை கண்டுபிடித்து தோல்வியை வெற்றியாக மாற்றுவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும்.

தோல்வியை ஒரு பாடமாக, அனுபவமாக எடுத்து கொள்ளுங்கள். ஒரு தடவை தோல்வி ஏற்பட்டது என்பதற்காக அந்த செயலை விட்டு ஒதுங்குவது தவறு. தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, இனி அதை வெற்றியாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.

வெற்றி தேவதை

எதிர்கால வெற்றியை இலக்காக வைத்து உழைத்தால் தோல்விகள் தோற்றுப்போகும். வெற்றி தேவதை தேடி வந்து மாலையிடும். வெற்றி மற்றும் தோல்வியை சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கல்வி, அனுபவம், அணுகுமுறை போன்ற காரணத்தாலும் தோல்வி ஏற்படலாம். எனவே உங்களிடம் உள்ள குறைகளை போக்கி வெற்றி வரும் வகையில் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு முறையும் உங்கள் திட்டங்களை நன்கு ஆராய்ந்து பாருங்கள். தற்போதைய கால சூழ்நிலைக்கு ஏற்ப திட்டங்களை தீட்டி செயல்படுங்கள்.

எதிர்கால திட்டம்

தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ள மறக்க வேண்டாம்.

தோல்விக்கான காரணங்களை அலசி ஆராயும் போது நடுநிலையுடன் செயல்படுங்கள். உங்கள் மீதும், உங்களின் செயல்பாடுகள் மீதும், எதிர்கால திட்டத்திலும் ஏதேனும் குறைகள் இருந்தால் மறைக்காமல் ஒப்புக் கொள்ளுங்கள்.

தோல்விகளை அனுபவமாக எடுத்துக் கொண்டு அதிலிருந்து பாடம் கற்று கொள்ள தயங்க வேண்டாம். ஒரு முறை செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பது அவசியம். தோல்வி நமக்கு கற்று தந்த பாடத்தை என்றும் நாம் மறந்து விட கூடாது. அவ்வாறு மறக்காமல் செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும்.

எதிலும் விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். வெற்றியை என்றும் உங்கள் பக்கம் தக்க வைத்துக்கொள்ளுங்கள்.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker