சமையல் குறிப்புகள்

பாதாம் பருப்பு பாயாசம்

தேவையான பொருட்கள் :

  • பாதாம் பருப்பு – 100 கிராம்
  • பால் – 3 கப்
  • சர்க்கரை – 1 கப்
  • ஏலக்காய் – 7
  • முந்திரி பருப்பு – 6
  • பிஸ்தா பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • குங்குமப்பூ அல்லது கேசரிப் பவுடர்- சிறிதளவு
  • நெய் – 3 டீஸ்பூன்




செய்முறை :

  • முதலில் முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக உடைத்து கொள்ளவும்.
  • பின்னர் அதை பிஸ்தா பருப்புடன் சேர்த்து நெய்யில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதையடுத்து பாதாம் பருப்பைக் கொஞ்சம் சூடான வெந்நீரில் போட்டு, ஒரு மணி நேரம் கழித்துத் தோலை எடுத்து விட்டு, அம்மியில் அல்லது மிக்சியில் நைசாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • அதை 3 கப்பு தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அடிக்கடி கிளறிவிடவும். பச்சை வாசனை இல்லாமல் நன்றாக கொதிக்கவிட்டு, சர்க்கரையைப் போடவும்.
  • சர்க்கரை நன்றாக கரைந்தபின் பாலை ஊற்றி மற்ற பொருட்களையும் போட்டு கொதித்தவுடன் இறக்கிவிடவும்.
  • அடுத்து நெய், குங்குமப்பூ சேர்த்தால் சுவையான பாதாம் பருப்பு பாயாசம் தயார்.






Show More

Related Articles

Close