சமையல் குறிப்புகள்புதியவை

அருமையான செட்டிநாடு பக்கோடா குழம்பு

அருமையான செட்டிநாடு பக்கோடா குழம்பு

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
புளி – நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு






பக்கோடாவிற்கு…

கடலைப் பருப்பு – 1/2 கப்
சோம்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
பூண்டு – 4 பற்கள்
பெரிய வெங்காயம் – 1
கொத்தமல்லி – சிறிது

அரைப்பதற்கு…

துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்






தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1/4 இன்ச்
கிராம்பு – 2
கறிவேப்பிலை – சிறிது

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

செய்முறை:

கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.

மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

கடலைப்பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்து மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு, பூண்டு, சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.






ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அத்துடன் பக்கோடாவிற்கு கொடுத்துள்ள பொருட்களான, வெங்காயம், உப்பு, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள கலவையை சிறு பக்கோடாக்களாக போட்டு பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.






அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, அத்துடன் புளிச்சாற்றினையும் சேர்த்து 5-7 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து குறைவான தீயில் வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும்.

பின் பொரித்து வைத்துள்ள பக்கோடாக்களை சேர்த்து கொத்தமல்லியைத் தூவி இறக்கி, 5 நிமிடம் கழித்துப் பரிமாறினால், செட்டிநாடு பக்கோடா குழம்பு ரெடி!!!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker