சமையல் குறிப்புகள்

இருமலுக்கு இதமான மிளகு சீரக ரொட்டி

தேவையான பொருட்கள் :

  • கோதுமை மாவு – 2 கப்
  • மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
  • சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு




செய்முறை :

  • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நன்கு மிருதுவாகப் பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  • பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
  • உருண்டைகளை இரு கைகளின் நடுவில் வைத்துச் சிறிது அழுத்தம் கொடுத்து வட்டமாகச் செய்து கொள்ளவும்.
  • பிறகு சிறிதளவு மாவில் புரட்டி வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும்.
  • சூடான தோசைக்கல்லில் ரொட்டிகளைப் போட்டு இரண்டு பக்கங்களிலும் நன்கு உப்பிக்கொண்டு வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
  • ருசியான மிளகு சீரக ரொட்டி தயார்.



Show More

Related Articles

Close