உறவுகள்எடிட்டர் சாய்ஸ்டிரென்டிங்புதியவை

ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் இந்த மூன்று குணங்களுக்காகத்தான் சீதை இராமரை மணக்க சம்மதித்தார்…

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்று இராமாயணம் ஆகும். சொல்லப்போனால் முதல் இதிகாசமே இராமாயணம்தான்.இராமாயணத்திற்கு பிறகு நடந்ததுதான் மகாபாரதம் ஆகும். இராமாயணம் இராவணனை அழிக்க திருமால் இராமாவதாரமாக தோன்றி தர்மத்தை நிலைநாட்டியதுதான் இராமாயணம் என்னும் பெரும்காவியம்.

இராமயணத்தில் போர் பற்றி மட்டுமே குறிப்பிட படவில்லை. இராமரின் குணங்கள் மூலம் ஒரு மகன் எப்படி இருக்க வேண்டும், ஒரு சகோதரன் எப்படி இருக்க வேண்டும், ஒரு கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று மக்கள் உணர்த்துவதாக இருக்கும். இராமாயணத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று இராமருக்கும், சீதைக்கும் இடையே மலர்ந்த காதலும், அவர்களின் திருமணமும்தான். சீதை இராமரை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க மூன்று காரணங்கள் இருந்தது. அந்த மூன்று காரணங்கள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

குணங்கள் என்ன? அனைத்து கடவுள்களும் சீதை இராமரைத்தான் திருமணம் செய்து கொள்வார் என்று முன்னறே கணித்தார்கள். சுயம்வரத்திற்கு முன்பு சீதையை நந்தவனத்தில் பார்த்தபோதே அவரின் அழகால் ஈர்க்கப்பட்ட இராமர் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டார். சீதையும் இராமரின் தோற்றத்தில் மையல் கொண்டு இராமர்தான் தன் கணவராக வரவேண்டுமென்று பார்வதி தேவியை வேண்டிக்கொண்டார். உருவ ஈர்ப்பை தாண்டி அவர்கள் ஒருவரையொருவர் விரும்ப வேறு சில காரணங்களும் இருந்தது.

முதல் காரணம் சீதை இராமரை திருமணம் செய்து கொள்ள தீர்மானிக்க முதல் காரணம் இராமரால் சீதையை பாதுகாக்க முடியும். சீதை சிறுவயதில் விளையாடியபோது தனது பந்தை எடுப்பதற்காக சிவதனுசை எளிதாக அசைத்தார். அதை பார்த்து வியந்த அவரின் தந்தை ஜனகர் சீதைக்கு அவரின் மகத்துவத்திற்கு இணையான மணமகனை மணம் முடித்து வைக்க முடிவெடுத்தார். சுயம்வரத்தில் அத்தனை இளவரசர்களுக்கு மத்தியில் இராமரால் மட்டுமே சிவதனுசை தூக்கவும், நாண் ஏற்றவும் முடிந்தது. அவரின் வலிமையால் ஈர்க்கப்பட்ட சீதை தன்னை ஆயுள் முழுவதும் பாதுகாக்கும் சக்தி இராமருக்கு உள்ளது என்று முடிவெடுத்தார்.

இராமர் மனதில் இருந்ததை கூறினார் ஜனகர் சீதையிடம் இராமருக்கு மாலை அணிவிக்கும்படி கூறினார் ஆனால் இராமரோ தன் தந்தை தசரதரின் அனுமதி கிடைக்காமல் சீதையை மணந்து கொள்ள இயலாது என்று கூறினார். நான் இங்கு வந்தது விசுவாமித்திரரின் அழைப்பை ஏற்றுதானே தவிர சுயம்வரத்தில் கலந்து கொள்வதற்காக அல்ல. எனவே என் தந்தையின் அனுமதி கிடைத்த பிறகே என்னால் சீதையை மணந்து கொள்ள இயலும் என்று இராமர் கூறிவிட்டார்.

இரண்டாவது காரணம் சீதைக்கு இராமரை பிடிக்க இரண்டாவது காரணம் இராமர் வெளிப்படையான மனதை கொண்டிருந்தார். பெரும்பாலான ஆண்கள் அவர்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். பெண்கள் அளவிற்கு ஆண்கள் மனதில் பட்டதை பேசமாட்டார்கள் என்று எப்போதும் பெண்கள் குறைகூறுவார்கள் ஆனால் இராமர் தன் மனதில் இருந்ததை வெளிப்படையாகவும், தெளிவாகவும் கூறினார். சீதை இராமருக்கு மாலை அணிவிக்க முயன்றபோது தன்னால் தன் தந்தையின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்ள முடியாது என்று இராமர் வெளிப்படையாக கூறிவிட்டார். பாதுகாப்பு, நம்பகத்தன்மை, வெளிப்படையான இதயம் இவை சீதையை வெகுவாக கவர்ந்தது.

மூன்றாவது காரணம் இராமரை சீதை விரும்ப மூன்றாவது காரணமாக இருந்தது அவரின் சுயகட்டுப்பாடு ஆகும். இராமரின் பதிலில் இருந்து இராமர் தனது உணர்ச்சிகளை புத்திசாலித்தனமாக கட்டுப்படுத்தக்கூடியவர் என்றும், ஒழுக்கமானவர் என்றும் சீதை புரிந்து கொண்டார். சீதையின் அழகிற்காக போரே நடந்தது. சீதையை மணந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான இளவரசர்கள் சுயம்வரத்தில் கலந்து கொண்டார்கள். ஆனால் அனைவரையும் தாண்டி சுயம்வரத்தில் வெற்றிபெற்ற பிறகும் தன் தந்தையின் அனுமதி இல்லாமல் சீதையை மணந்து கொள்ள இயலாது என்று கூறியதன் மூலம் அவரின் சுயகட்டுப்பாடு சீதைக்கு விளங்கியது.

சீதை ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்டார் இனிமையான, தூய்மையான, மென்மையான, தன்னலமில்லாத சீதை நமக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளார். இராமரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்த பின், அவரின் மனைவியான பிறகு பல்வேறு சூழ்நிலைகளால் அவர் கடுமையான ஆணாதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டார். அவரின் வாழ்க்கையிலிருந்து ஆண்களும், பெண்களும் பல முக்கிய வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker