சமையல் குறிப்புகள்

பாகற்காய் ஸ்டஃப்டு மசாலா

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பாகற்காய் ஸ்டஃப்டு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • பாகற்காய் – 5
  • நறுக்கிய சின்ன வெங்காயம் – அரை கப்
  • மிளகாய்தூள் – அரை ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
  • மாங்காய் பவுடர் – அரை ஸ்பூன்
  • சீரகம் – அரை டீஸ்பூன்
  • பெருங்காய தூள் – கால் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • சோம்பு – அரை ஸ்பூன்
  • நறுக்கிய மாங்காய் – சிறிதளவு
  • கடலை எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

  • பாகற்காயின் மேல் தோலை லேசாக சீவிக்கொள்ளவும். பின்னர் இரண்டாக வெட்டி நடுப்பகுதியில் உப்பு கலந்து அரை மணி நேரம் வெயிலில் உலர வைக்கவும்.
  • பின்னர் அவைகளை நன்றாக கழுவிக்கொள்ளவும்.
  • வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மாங்காய் பவுடர், சீரகம், பெருங்காயத்தூள், சோம்பு, மாங்காய்துண்டுகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாகற்காய்களின் உள்ளே வைக்கவும்.
  • அவை கீழே விழாத அளவுக்கு நூலினால் கட்டிக்கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பாகற்காயை கலவையுடன் போட்டு பொன்னிறமாகும் வரை கிளறி எடுத்து சுவைக்கலாம்.
  • சூப்பரான பாகற்காய் மசாலா ரெடி.
Show More

Related Articles

Close