சமையல் குறிப்புகள்

வெஜிடபிள் எலுமிச்சை சாதம்

எலுமிச்சை சாதத்தில் காய்கறிகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். இன்று காய்கறி சேர்த்து எலுமிச்சை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • பச்சரிசி – 1 கப்,
  • எலுமிச்சம் பழம் – 2,
  • கேரட் – 1,
  • பீன்ஸ் – 15,
  • பட்டாணி – அரை கப்,
  • இஞ்சி – 1 துண்டு,
  • பச்சை மிளகாய் – 3,
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
  • பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை – சிறிதளவு,
  • கடுகு – அரை டீஸ்பூன்,
  • உளுந்து – 1 டீஸ்பூன்,
  • கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்,
  • முந்திரி – 10,
  • எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
  • உப்பு – தேவைக்கு.

செய்முறை :

  • அரிசியை சிறிதளவு உப்பு சேர்த்து உதிராக வேக வைத்து கொள்ளவும்.
  • எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
  • காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி ஆகியவற்றைத் தாளித்த பின்னர் காய்கறிகள், இஞ்சி, மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.
  • காய்கறிகள் வெந்ததும், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.
  • இந்தக் கலவையை சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறுங்கள்.
  • சூப்பரான காய்கறி எலுமிச்சை சாதம் ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker