சமையல் குறிப்புகள்

ஜீரண சக்தியை அதிகரிக்கும் வெந்தயக்கீரை சாதம்

வெந்தயக்கீரை ஜீரண சக்தியை அதிகரித்து பசியை தூண்டுகிறது. சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. இன்று இந்த கீரையை வைத்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • பச்சரிசி – 1 கப்,
  • வெந்தயக்கீரை – 1 கட்டு,
  • தக்காளி – 1,
  • வெங்காயம் – 1,
  • இஞ்சி – 1 துண்டு,
  • பூண்டு – 5 பல்,
  • பச்சை மிளகாய் – 3,
  • மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன், \
  • சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா – தலா 1 டீஸ்பூன்,
  • தேங்காய்ப்பால் – ஒரு கப்,
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
  • உப்பு – தேவைக்கு.

செய்முறை :

  • வெந்தயக்கீரையில் இலையை மட்டும் ஆய்ந்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டு, மிளகாயை நசுக்கி கொள்ளவும்.
  • குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நசுக்கி வைத்த பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை போட்டு வதக்குங்கள்.
  • பிறகு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
  • தக்காளி குழைய வதங்கியதும் கீரையை சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்குங்கள்.
  • பச்சை வாடை போனதும், இந்தக் கலவையோடு தேங்காய்ப்பால், நான்கு கப் தண்ணீர், தேவையான உப்பு, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
  • சூப்பரான சத்தான வெந்தயக்கீரை சாதம் ரெடி.
Show More

Related Articles

Close