ஆரோக்கியம்உறவுகள்புதியவைமருத்துவம்

ஊரவைத்த வேர் கடலையில் இத்தனை நன்மைகளா.. இனிமேல் மிஸ் பண்ணாதீங்க.

பீன்ஸ், பட்டாணி போன்ற தாவர வகையைச் சேர்ந்ததுதான் வேர்கடலையும். இதனை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.அளப்பரிய நன்மை பயக்கும் இந்த வேர்கடலையில் எண்ணிலடங்காத மருத்துவ குணங்களும் நிறைந்து காணப்படுகின்றன.

அதுமட்டுமின்றி வேர்க்கடலை உடலுக்கு அவசியமான இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.தினமும் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிட்டுவதால் கிடைக்ககூடிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஊறவைத்த வேர்கடலை புற்றுநோய் அபாயத்தை மிகப் பெரிய அளவில் குறைக்கிறது. உடலில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

குறிப்பாக மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்க உதவுகிறது. நீங்கள் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், வெல்லத்துடன் வேர்க்கடலையை ஊறவைத்து சாப்பிடுவர முதுகு வலி நீங்கும்.
வேர்க்கடலையில் பீட்டா-சிட்டோஸ்டெரால் நிரம்பியுள்ளது இதனால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்களால், வேர்க்கடலை நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் நீண்ட நேரம் நம்மை முழுமையாக வைத்திருக்கும்.

இது, வேர்க்கடலையில் ஆலிவ் ஆயிலில் காணப்படக்கூடிய ஓலிக் எனப்படும் ஒருவித அமிலமும் காணப்படுகிறது.இது உடலில் உள்ள செல்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து அவற்றை பாதுகாக்க துணைப்புரிகின்றது.

வேர்க்கடலையில் குறிப்பிட்ட அளவிலான புரதமும், வைட்டமின் -ஈ யும் ஒரு ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக செயல்பட்டு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது.

நார்சத்துக்களும், புரதமும் இரண்டையும் கொண்டுள்ள வேர்க்கடலைகள் உடலுக்கு சக்தி அளிப்பதுடன் உடல் எடையை ஒரு கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் உதவுகின்றது மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும்.

நார்ச்சத்து அதிகம் இருப்பதால், எரிச்சலூட்டும் குடல் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க உதவும். வேர்க்கடலைகள் இயற்கையாகவே இதயத்திற்கு நன்மை கொடுக்கக்கூடிய நல்ல கொழுப்புகளை அதிகப்படுத்தி கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.

இதனால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. அது மட்டுமல்லாமல் வேர்க்கடலைகளில் இன்சுலின் சுழற்சியை ஊக்குவிக்கும் மக்னீசியம் அதிக அளவில் உள்ளது.

இந்த இன்சுலின் தான் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடலின் செல்களுக்குள் செலுத்தி அதனை சக்தியாக மாற்ற உதவுகிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker